ஆசை கனவே அணைந்து போகாதே 
உன்னை அடைய துடிக்கும் என்னை எட்டி தள்ளாதே
தட்டி பறிக்கும் ஆசை இல்லை எனக்கு
ஆனால் எட்டும் வரை முயற்சி செய்வேன்
கற்றுக்கொடு,  வெற்றி பாதைக்கு வெளிச்சம் கொடு
நினைத்ததை முடிக்கும் வரை மனதுக்கு சக்தி கொடு
சோம்பல் இல்லா உடலை வளர்த்திடு
வெற்றிக்கு முயற்சி எனும் விதை விதைத்திடு
உழைப்பு எனும் உரம் இட்டிடு
வெற்றி எனும் கனி பறித்திடு
ஆனந்த வாழ்வை அடைந்திடு!! 
 


Comments
Leave a Reply