படுகுழியென தெரிந்தும் விழுந்தேன் காதலில்!! 
விழுந்த பின்பும் எழ மனமில்லை ஏனோ…!

கண்களை திறந்து கனவுகள் காண்கிறேன் காதலே! 
உன்னை கரம் பிடிக்க வேண்டும் என்று…

கண்ணைக்கட்டி விட்டது போல் இருக்கும்
காதல் உலகை கண்ணால் கண்டது போல்
அகமகிழ்ந்தேன்!!!

வேண்டும் என்று மனம் சொல்ல, வேண்டாம் என்று
மானம் தடுக்க,  அடிமை என்று சொல்லி
சரணடைந்தேன் உன் இதயச்சிறையில்….

படுகுழியில் இருந்து என்னை மீட்டெடுத்தாய்…
என்னை நேசித்த பாவி என்று…

கண் கட்டை அவிழ்த்து விட்டாய் 
நம் அழகான வாழ்வை காண...

கரம் பிடித்து நடத்தி சென்றாய்…
திருமணம் முடிக்க…

இதயச்சிறையில் இருந்து மீட்டெடுத்து,
என்னை மணம் முடித்து ஆயுள்
தண்டனை கொடுத்துவிட்டாய் உனக்கு…!!
இனி நான் உன் அடிமை என்று...

யார், யாருக்கும் அடிமை அல்ல காதலில்!!!
வாழ்க பெண்ணினம்…. ஒழியட்டும் அடிமைத்தனம்...

 


Comments
Leave a Reply